சங் 65: 1 – 13
வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்
இது நமக்குப் பேராசையை உண்டாக்குவதற்காக சொல்லப்படவில்லை. பரலோகப் பொக்கிஷம்தான் நிலையானது என்பதால் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு பரலோகக் குடிமகன் பரலோகக்காரியங்களைக் குறித்தே சிந்தித்துக்கொண்டிருக்கவேண்டும் என்பதால் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது. பணத்தின் மீது நம் கவனமெல்லாமிருந்தால், பரலோகத்தைப் பற்றி சிந்திக்கக் கூட நேரமிருக்காது என்பதால் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது. பண ஆசை பலவிதமான தவறான காரியங்களில் நம்மைக் கொண்டுபோய்விடும் என்பதால் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது. பரலோகப் பொக்கிஷம் என்றால் என்ன? இயேசு கிறிஸ்துவே முதன்மையான பொக்கிஷம்! பரலோகத்தில் நாம் அவரோடு வாழும் பாக்கியத்தைப் பெறுகிறோம். பரலோகம் என்ற இடம் இரண்டாவது பொக்கிஷம். நித்திய அக்கினியில் தள்ளப்படாமல் பரலோகத்தில் வாழும் ஆசீர்வாதத்தை நாம் பெறுகிறோம். பரலோகத்தில் கிடைக்கும் ஆனந்தமும் பேரானந்தமுமே (சங் 16: 11) மூன்றாவது பொக்கிஷம்.
ஜெபம்
ஆண்டவரே, பரலோகத்தில் வாழும் பாக்கியத்தை எனக்குத் தந்து என்னை ஆசீர்வதியும். ஆமென்.