காலைத் தியானம் – ஜனவரி 05, 2021

லூக் 49: 1 – 20         

அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டு போவதில்லை                

இந்த உண்மையைத் தெரிந்துகொள்ள அதிக ஞானம் தேவையில்லை. நாம் மரிக்கும்போது நம்முடைய பணமோ, வீடோ அல்லது காரோ நம்முடன் வருவதில்லை என்பது நமக்கு நன்றாகத் தெரியும். அப்படியென்றால் பணமே நம்மிடம் இருக்கக் கூடாது என்று அர்த்தமா? இல்லை. நம்முடைய வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்குப் பணம் தேவை. அதற்கு மேல் ஆண்டவர் கொடுத்தால், அதைவைத்து என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம். நம்முடன் கொண்டு போகமுடியாததை, ஏழைகளுக்குக் கொடுப்பதின் மூலமாக, நாம் போவதற்கு முன்னதாகவே அதைப் பரலோகத்துப் பொக்கிஷமாக மாற்றிவிடுகிறோம்! ஒரு இந்தியன் ஐந்து வருடங்கள் இருந்துவிட்டு வந்துவிடவேண்டும் என்ற எண்ணத்தோடு துபாய்க்குப் போகிறான் என்று வைத்துக் கொள்வோம். அங்கு வீடு வாங்கலாம், ஆனால் அந்நாட்டைவிட்டுப் போகும்போது அந்த வீட்டை அவன் விற்கமுடியாது என்று ஒரு சட்டம் இருக்கிறது என்றும் வைத்துக்கொள்வோம். எந்த இந்தியனாவது அங்கு சம்பாதிக்கும் பணத்தைவைத்து அங்கு வீடு வாங்குவானா?              

ஜெபம்

ஆண்டவரே, என் தேவைகளுக்கு அதிகமான பணத்தையும் பொருட்களையும் எப்படி உபயோகிக்கவேண்டும் என்பதை எனக்குச் சொல்லித் தாரும். ஆமென்.