காலைத் தியானம் – ஜனவரி 06, 2021

சங் 24: 1 – 10             

பூமியும் அதின் நிறைவும் . . . கர்த்தருடையது             

ஆகாய் 2:8ல், வெள்ளியும் என்னுடையது பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.  உபாகமம் 8:18ல், கர்த்தரே ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் உன்னிடமுள்ள பணமும் பொருட்களும் நீ எதையோ சாதித்துவிட்டதால் உன்னுடையவைகளாகிவிட்டவை அல்ல.  உன்னுடைய பணம் கர்த்தருடையது. அவர் உன்னைத் தமது பணத்தைக் கண்காணிக்கும் மானேஜராக நியமித்திருக்கிறார். நீ அதை “மானேஜ்” பண்ணுகிறாயா அல்லது உன்னுடையதாக்கிக் கொண்டாயா?            

ஜெபம்

ஆண்டவரே, நீர் என்னை நம்பி கொடுத்திருக்கும் உம்முடைய பணத்தையும் பொருட்களையும் நீர் விரும்பும்படி உபயோகிக்கக் கற்றுத்தாரும். ஆமென்.