காலைத் தியானம் – ஜனவரி 07, 2021

2 கொரி 9: 1 – 7             

உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்              

கொடுப்பதற்கு உற்சாகமும் மகிழ்ச்சியும் எப்போது வருகிறதோ, அப்போது நான் கொடுக்கிறேன் என்று சொல்லுகிறவன்  அநேகமாக ஒரு நாளும் கொடுக்கவே மாட்டான். கொடுப்பதில் இருக்கும் மகிழ்ச்சியையும் அனுபவிக்க மாட்டான். பிரதிபலன் எதிர்பார்க்காமல் கொடுத்தால், மகிழ்ச்சியும் உற்சாகமும் தாமாக வரும். கொடுப்பதின் மகிழ்ச்சியைக் கொடுக்கும்போதும், கொடுத்த பின்னருமே அனுபவிக்கமுடியும். நீ உன் திருச்சபைக்கும், மற்ற ஊழியங்களுக்கும், ஏழைகளுக்கும் உன் பணத்தையும் செல்வத்தையும் கொடுத்துவருகிறாயென்றால் என்ன நோக்கத்தோடு அதைச் செய்கிறாய் என்பதை யோசித்துப் பார். உற்சாகமாய், உள்நோக்கங்கள் எதுவும் இல்லாமல் கொடுப்பதையே கர்த்தர் ஏற்றுக் கொள்ளுகிறார்.            

ஜெபம்

ஆண்டவரே,  பிரதிபலன் எதிர்பார்க்காமல் கொடுக்கும் உள்ளத்தை எனக்குத் தாரும். ஆமென்.