2 கொரி 8: 1 – 8
கொடிய தரித்திரமுள்ளவர்களாயிருந்தும் தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே கொடுத்தார்கள்
எனக்கு எப்போது என் தேவைக்குமேல் வருமானம் வருகிறதோ, அப்போது நான் ஆலயத்துக்கும், ஊழியங்களுக்கும், ஏழைகளுக்கும் கொடுப்பேன் என்று சொல்லுகிறவன் கொடுப்பது மிகவும் கடினம். மக்கெதோனியா நாட்டு மக்கள் ஏழ்மையின் மத்தியில் கொடுத்தார்கள். பரிபூரண சந்தோஷத்தோடு கொடுத்தார்கள். மேலும் அவர்கள் கொடுப்பதை ஏற்றுக்கொள்ளும்படி பவுலையும் மற்ற சீஷர்களையும் வற்புறுத்தி வேண்டிக் கொண்டார்கள் (வசனம் 4). இங்கு நீ கொடுக்கவேண்டும் என்ற வற்புறுத்துதல் காணப்படவில்லை. நான் கொடுப்பதை தயவுசெய்து நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வற்புறுத்துதலைத்தான் காண்கிறோம். கொடுப்பது பணக்காரரின் கடமை என்ற எண்ணம் காணப்படவில்லை. அது ஏழைகளுக்குமுள்ள உரிமை என்ற எண்ணமே காணப்படுகிறது. இன்று சுவிசேஷ ஊழியங்களைத் தாங்குகிற அநேகக் கிறிஸ்தவர்கள்கூட, ஏழைகளுக்கு உதவி செய்யும் நிறுவனங்களைத் தாங்குவது “பணக்கார” நாடுகளின் கடமை என்றே நினைக்கின்றனர். அது தவறு. நமக்கும் அந்த கடமையும் உரிமையும் உண்டு.
ஜெபம்
ஆண்டவரே, மக்கெதோனியா நாட்டு மக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது என்னிடம் எவ்வளவோ பணமும் வசதியும் இருக்கின்றன. கொடுக்கும் பாக்கியத்தில் பங்குபெற எனக்கும் உதவி செய்யும். ஆமென்.