யாத் 36: 1 – 7
வேண்டியதற்கும் அதிகமான பொருட்களை ஜனங்கள் கொண்டுவருகிறார்கள்
இஸ்ரவேல் மக்கள் தேவைக்கு அதிகமாகக் கொடுத்தார்கள். மோசே அவர்களை நோக்கி, நீங்கள் கொடுத்தது போதும் என்று சொல்லவேண்டியதிருந்தது. யாத்திராகமம் 35: 5ல் மோசே, மனமுள்ளவன் எவனோ அவன் காணிக்கையைக் கொண்டுவரலாம் என்றுதான் சொல்லியிருந்தார். கொண்டு வந்தவர்கள் தாராளமாய்க் கொண்டுவந்தார்கள். மோசேயும் தேவைக்கு அதிகமாய் வந்தவுடன், போதும் என்று சொல்லிவிடுகிறார். இன்று தாராளமாய்க் கொடுக்கிறவர்கள் சிலரே. அது ஒரு பக்கம். மறுபக்கத்தில், போதும், ஊழியத்தின் தேவைகள் சந்திக்கப்பட்டுவிட்டன என்று சொல்லுகிறவர்களைக் காண முடிகிறதில்லை. நாம் படிக்கவேண்டிய பாடங்கள் ஏராளம்.
ஜெபம்
ஆண்டவரே, இஸ்ரவேலரின் தாராளத்தையும், மோசேயின் நாணயத்தையும் எங்கள் மத்தியிலே உருவாக்கியருளும். ஆமென்.