காலைத் தியானம் – ஜனவரி 10, 2021

மத் 10: 41 – 42            

தன் பலனை அடையாமற்போகான்               

இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று இயேசு சொல்லியிருக்கிறார். ஒருவனுக்குத் தண்ணீர் கொடுப்பது நமக்கு சாதாரண காரியமாக இருக்கலாம். இயேசுவுக்கோ அது மிகவும் முக்கியமானது. நம்முடைய ஒவ்வொரு செயலும், அது நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும், அவருடைய பார்வைக்குத் தப்புவதில்லை. ரோமர் 2:6ல் தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத் தக்கதாக அவனவனுக்குப் பதிலளிப்பார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இயேசுவுக்குப் பிரியமான செயல்களைச் செய்வதற்கு உனக்குக் கொடுக்கப்படும் தருணங்களைத் தவறவிட்டு விடாதே.         

ஜெபம்

ஆண்டவரே, ஊழியர்களைத் தாங்கவும், ஏழைகளுக்கு உதவவும் நீர் கொடுத்துள்ள அநேகத் தருணங்களுக்காக நன்றி சுவாமி. ஆமென்.