காலைத் தியானம் – ஜனவரி 12, 2021

மத் 6: 19 – 21                

உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்              

இது நாம் ஏற்கனவே தியானித்த வேதபகுதி. இன்று வேறு ஒரு வசனத்தைப் பார்க்கப் போகிறோம். நம்முடைய பணம் எங்கே இருக்கிறதோ அங்கேதான் நம்முடைய மனதும் இருக்கும். மனம் பணத்தைத் தொடர்கிறது. உன் பணத்தைத் தொழில் நிறுவனங்களின் பங்குகளில் (shares of companies) முதலீடு செய்தால், உன் மனம் அனுதினமும் பங்கு சந்தையைப் பின் தொடரும். உன் பணத்தையெல்லாம் தங்கத்தில் முதலீடு செய்தால், அனுதினமும் உன் மனது தங்கத்தின் விலையைப் பின் தொடரும். உன் பணத்தை சுவிசேஷப் பணிக்கென்று கொடுத்துக் கொண்டேயிருந்தால் உன் மனமும் சுவிசேஷப் பணியைப் பின்தொடரும். சுவிசேஷப் பணிகளுக்கென்று கொடுத்தால் உன் உள்ளத்தில் சுவிசேஷ வாஞ்சையும் வளர்ந்துகொண்டே போகும். ஆகையால் உன் மனது எங்கே இருக்கவேண்டும் என்று நீ விரும்புகிறாயோ, அல்லது உன் ஆண்டவர் விரும்புகிறாரோ, அங்கே உன் பணத்தை முதலீடு செய்.        

ஜெபம்

ஆண்டவரே, நீர் என்னிடம் கொடுத்து வைத்திருக்கும் உம்முடைய பணத்தை, உமக்குப் பிரியமானவைகளில் முதலீடு செய்ய எனக்கு ஞானத்தைத் தாரும். ஆமென்.