காலைத் தியானம் – ஜனவரி 15, 2021

2 பேதுரு 3: 1 – 18                       

பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்             

உன்னுடைய பணமும் செல்வமும் மாத்திரமல்ல, பூமியே எரிந்து அழிந்துபோகும் என்று பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது. பூமியே அழிந்து போவதை நினைத்தால், ஆழ்ந்த துக்கம் ஏற்படுகிறதா? பூமிதான் நம்முடைய நிரந்தர இடம் என்றிருந்தால், நிச்சயமாக நாம் துக்கப்பட வேண்டியதுதான். C.S. லூயிஸ் என்ற கர்த்தருடைய மனிதன் இவ்விதமாக எழுதியிருக்கிறார். ஒரு தகப்பன் அருமையான கடற்கரையில் விளையாடவும் விடுமுறையை அனுபவிக்கவும் தன் மகனை அழைக்கும்போது,  அந்த அழைப்பின் மேன்மையை அறியாமல், அந்த சிறுவன் சேரியிலுள்ள சேற்றில் விளையாடுவதையே விரும்பினானாம். நம்முடைய வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கிறது என்கிறார் லூயிஸ். பரலோக இன்பத்தை நமக்குக் கொடுக்கத் தயாராக இருக்கும் பரமதகப்பன் சொல்வதைப் புரிந்து கொள்ளாமல், சிற்றின்பங்களில் நாம் திருப்தியடைந்து விடுகிறோம்.  நீ எப்படிப்பட்ட இன்பங்களுக்காக வாழ்கிறாய்?       

ஜெபம்

ஆண்டவரே, நீர் தரும் பேரின்பத்திற்காக, சிற்றின்பங்களைக் கைவிட  எனக்கு உதவி செய்யும். ஆமென்.