காலைத் தியானம் – ஜனவரி 17, 2021

மல்கியா 3: 1 – 10                       

நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள்             

நேற்று வாசித்த அதே வேதபகுதியிலிருந்து வேறு ஒரு வசனத்தை இன்று தியானிப்போம்.  என்னை வஞ்சிக்கிறீர்கள் என்று தமிழ் வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கும் பதம் ஆங்கில மொழிபெயர்ப்பில், என்னிடம் திருடுகிறீர்கள் அல்லது என்னிடத்தில் கொள்ளையடிக்கிறீர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிலர், நான் எப்படி ஒரேயடியாக பத்து சதவிகிதம் கொடுக்கும் பழக்கத்திற்கு வர முடியும் என்று கேட்கிறார்கள். ஐந்து சதவிகிதத்தில் ஆரம்பித்து படிப்படியாக கூட்டிக்கொண்டே வருவேன் என்று சொல்லுகிறார்கள். அது, ஆண்டவரிடம் நான் பத்து சதவிகிதம் கொள்ளையடித்து வந்தேன். இப்போது ஐந்து சதவிகிதம்தான் கொள்ளையடிப்பேன் என்று சொல்வதைப் போலிருக்கிறது. கர்த்தருடைய வார்த்தைக்கு முழுமையாகக் கீழ்ப்படி.      

ஜெபம்

ஆண்டவரே, உமக்கு முழுமையாகக் கீழ்ப்படிய கிருபை தாரும். ஆமென்.