காலைத் தியானம் – ஜனவரி 18, 2021

லூக் 6: 31 – 38                       

கொடுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்             

38வது வசனத்தைத் தவறாகப் புரிந்துகொள்பவர்கள்  (ஏன் பிரசங்கிக்கிறவர்களும் கூட) அநேகர். இது அதிக வட்டித் தரும் கர்த்தருடைய முதலீட்டுத் திட்டம் அல்ல. ஒரு ஊழியத்துக்காகக் காணிக்கை சேகரிக்க வந்திருந்த பிரசங்கியார் ஒருவர், நீ இன்று 1000 ரூபாய் காணிக்கைக் கொடுத்தால் கர்த்தர் ஒரு மாதத்திற்குள் உனக்கு 10,000 ரூபாய் தருவார் என்று பிரசங்கம் செய்தார். கர்த்தர் பேரில் வியாபாரம் செய்கிறவர்களைக் குறித்து ஜாக்கிரதையாய் இரு. நீ மற்றவர்களுக்கு என்ன செய்கிறாயோ அதுதான் உனக்கும் செய்யப்படும் என்பதுதான் இந்த வேதபகுதியின் மையக்கருத்து. நீ கொஞ்சத்தில் உண்மையாயிருந்தால் உன்னிடத்தில் அதிகம் கொடுக்கப்படும் என்பது உண்மைதான். கர்த்தர் உனக்கும் அமுக்கிக் குலுக்கிச் சரிந்துவிழும்படி கொடுக்கலாம். கர்த்தர் உன்னிடம் அதிகமாகக் கொடுத்து வைப்பது உன்னுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக அல்ல. உன் கொடுக்கும் தரத்தை உயர்த்துவதற்காகவே என்பதை மறந்துவிடாதே.     

ஜெபம்

ஆண்டவரே, என் கொடுக்கும் தரத்தை நான் உயர்த்த எனக்கு உதவி செய்யும். ஆமென்.