காலைத் தியானம் – ஜனவரி 19, 2021

2 கொரி 8: 9 – 15                        

உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக             

மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை. கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்கு குறைவானதுமில்லை என்பது பரலோக ஒழுங்கு முறைகளில் ஒன்று. இது உலக நியதிக்கு எதிர்மறையானது. அதிக செல்வத்தினாலுண்டாகும் துன்பங்களைக் குறித்து ஏற்கனவே தியானித்தோம். அதே போல வறுமையினாலும் துன்பங்களுண்டு. ஆகையால்தான் நீதிமொழிகள் 30:8ல் தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக என்று சொல்லப்பட்டிருக்கிறது. செல்வம் உடையவர்கள் வறுமையில் இருப்பவர்களுக்குக் கொடுப்பதின்மூலம் இரண்டு பிரச்சனைகளுக்கு முடிவு ஏற்படுகிறது. கொடுக்காவிட்டால் இரண்டு பிரச்சனைகளும் வளர்ந்துகொண்டேதான் போகும்.     

ஜெபம்

ஆண்டவரே, எனக்கு அதிக செல்வமும் வேண்டாம்; வறுமையும் வேண்டாம். நீரே என்னைக் காத்து வழிநடத்தும். ஆமென்.