காலைத் தியானம் – ஜனவரி 20, 2021

ரோமர் 12: 1- 13                            

பகிர்ந்து கொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்             

பரிசுத்த பவுல் பலவிதமான கிருபையின் வரங்களைக் குறித்து இங்கு எழுதியிருக்கிறார். தீர்க்கதரிசனம் சொல்லுவது, ஊழியஞ்செய்வது, புத்தி சொல்வது போன்றவைகளைக் குறித்து நாம் அடிக்கடி பேசுகிறதுண்டு. ஆனால் கொடுக்கும் வரத்தைக் குறித்து நாம் அதிகமாய்ப் பேசுவதில்லை. கிறிஸ்தவர்களுக்குள் வாழ்க்கையின் பல பகுதிகளைப் பற்றி ஒருவரையொருவர் கேள்விகேட்டு ஊக்கப்படுத்திக் கொள்வதுண்டு. உன்னுடைய திருமண வாழ்க்கை எப்படியிருக்கிறது? ஒழுங்காக வேதம் வாசிக்கிறாயா? உன்னைப் பரிசுத்தமாகக் காத்துக் கொள்ளுகிறாயா? உன் விசுவாசத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுகிறாயா? இப்படியெல்லாம் கேட்கிற நாம், நீ ஆண்டவருக்குக் கொடுக்கும் ஒழுக்கம் எப்படியிருக்கிறது என்று கேட்பதில்லை. கொடுப்பது சொந்த விஷயம் என்று விட்டுவிடுகிறோம். கொடுப்பதிலேயும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவோமாக.   

ஜெபம்

ஆண்டவரே, உமக்குக் கொடுப்பதிலேயும் நாங்கள் ஒருவருக்கொருவர் உத்திரவாதத்தோடு வாழக் கிருபை தாரும். ஆமென்.