காலைத் தியானம் – ஜனவரி 21, 2021

ஆகாய் 1: 4 – 11                                

அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும் இதோ கொஞ்சம் கிடைத்தது             

இந்த மாதம் முழுவதும், நாம் எப்படி பணத்தைச் சேர்ப்பதிலேயே குறியாக இருக்கக் கூடாது என்பதையும் எப்படி மற்றவர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்பதையும் குறித்து தியானித்துக் கொண்டிருக்கிறோம். ஒருவேளை நீ, என்னுடைய நிலைமையே  வேறு; நான் எவ்வளவு உழைத்தாலும் எனக்குத் தேவையான வருமானம்கூட கிடைக்கிறதில்லை என்று நினைக்கிறாயோ? அதற்குக் காரணம் என்ன என்று யோசித்துப் பார். கர்த்தருக்குக் கொடுக்கவேண்டிய முதலிடத்தை வேறே யாருக்காவது அல்லது வேறே எதுக்காவது கொடுத்துவிட்டாயா? கர்த்தருக்குச் செய்யவேண்டியதைச் செய்யாமல் இருக்கிறாயா? உன் ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டு உன் தவறை சரி செய். ஆண்டவர் உன் கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதிப்பார். உனக்குத் தேவையான வருமானம் உனக்குக் கிடைக்கும்.  

ஜெபம்

ஆண்டவரே, என் தவறுகளை மன்னித்து என் உழைப்புக்கேற்ற பலனை எனக்குத் தாரும்.  ஆமென்.