காலைத் தியானம் – ஜனவரி 23, 2021

லூக் 12: 13 – 21                                   

தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல் தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன்               

சொத்தை நியாயமாகப் பங்கு பிரித்துத் தரும்படி வந்த மனிதனிடம் அவர் சொத்தைக் குறித்த நியாயத்தைப் பேசவில்லை. பொருளாசையைக் குறித்து எச்சரிக்கிறார். திரளான ஆஸ்தி ஒருவனுக்கு ஜீவன் அல்ல என்று சொல்லுகிறார். ஒருவன் தேவனிடத்தில் ஐசுவரியவானாக இருப்பதும், தனக்காகச் சொத்துக்களைச் சேர்த்து வைப்பதும், சேர்த்து செய்யமுடியாத,  ஒன்றுக்கொன்று முரணானவை என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். உன் சொத்துக்கள் உலக மக்களிடம் “வெற்றி வாழ்க்கை வாழ்ந்தவன்” என்ற பெயரை வாங்கித் தரலாம். உன் ஆண்டவரிடம் “உண்மையும் உத்தமுமான ஊழியக்காரன்” என்ற பெயரை வாங்கித் தரமுடியாது. நீ உன் ஆண்டவர் முன் நிற்கும்போது, நான் இன்னும் அதிகமாய் ஏழைகளுக்கும் ஊழியங்களுக்கும் கொடுத்திருக்கலாம் என்று நினைக்க வேண்டியதிருக்குமோ? 

ஜெபம்

ஆண்டவரே, பொருளாசை என்னைப் பற்றிக் கொள்ளாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். ஆமென்.