காலைத் தியானம் – ஜனவரி 24, 2021

மத் 6: 24 – 34                                  

நாளைக்காகக் கவலைப் படாதிருங்கள்               

எதிர்காலத்திற்காக சேர்த்து வைக்கவேண்டும் என்ற எண்ணம் பலரை உலகப் பொருட்களின் பின்னால் போக வைக்கிறது. எதிர்காலத்திற்கு எவ்வளவு பணம் போதுமானது என்ற கேள்விக்கு ஒருவரிடமும் பதில் கிடையாது. எதிர்காலத்திற்காக சேர்க்கிறேன் என்று காரணம் காட்டி கர்த்தருக்குக் கொடுக்கவேண்டியதைக் கொடுக்காமலிருந்தால், அது உன்னை அழிவுக்கு நேராகக் கொண்டுபோய் விடும். உன் வருமானத்தில் ஒரு பகுதியைச் சேமித்து வைப்பது நல்லதுதான். ஆனால் எதிர்காலத்திற்காக உன் சேமிப்புகளை நம்பாதே. உன் ஆண்டவரை மாத்திரம் நம்பு. நாளைக்காகக் கவலைப் படாதிருங்கள் என்பது உன் ஆண்டவரின் கட்டளை. 

ஜெபம்

ஆண்டவரே, நீரே என் எதிர்காலத்தை உம் கையில் வைத்திருக்கிறவர். ஆகையால் என் சேமிப்புகளை அல்ல, உம்மையே நம்பி வாழ உதவி செய்யும். ஆமென்.