காலைத் தியானம் – ஜனவரி 26, 2021

நீதி 11: 1 – 10                                      

கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது               

நீ சரியான முறையில் சம்பாதிக்கிறாயா என்பது கர்த்தருக்கு மிகவும் முக்கியம். பிறரை ஏமாற்றி பணம் சம்பாதிப்பது கர்த்தருக்கு அருவருப்பான காரியம். காணிக்கைக் கொடுத்துவிட்டால், தவறான வழிகளில் சம்பாதித்த பணம் தூய்மையாகிவிடாது. தசமபாகம் கொடுத்துவிட்டால் வரதட்சணையாக வாங்கிய பணம் நல்ல பணமாகிவிடாது. உனக்குக் கிடைக்கும் சம்பளம்தான் உன் ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் ஆசீர்வாதம். லஞ்சம் வாங்குவது உனக்கு சாபத்தைக் கொண்டுவரும். லஞ்சம் கொடுத்து காரியத்தைச் சாதித்துக் கொள்வது நீ பணவசதியில்லாதவர்களுக்கு விரோதமாகச் செய்யும் பாவம். உன்னிடம் உழைக்கும் வேலையாட்களுக்கு நியாயமான சம்பளம் கொடுக்காமல் சம்பாதிக்கும் லாபம் நிலைக்காது. உன் வருமானம் எப்படிப்பட்டது?

ஜெபம்

ஆண்டவரே, நான் சம்பாதிக்கும் முறையில் ஏதாவது குறை இருக்குமானால் அதை எனக்கு உணர்த்தியருளும். ஆமென்.