மத் 17: 24 – 28
உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா?
நியாயமாகப் பார்த்தால் இயேசு வரிப்பணம் செலுத்தவேண்டியதில்லை. ஆனால் அவர் மற்றவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு வரி செலுத்தினார். அவர் அன்றைய தலைவர்கள் வரிப்பணத்தை எப்படி தவறாக உபயோகித்தார்கள் என்பதைக் குறித்துப் பேசி, குற்றம் சாட்டி, வரி கட்டாமல் இருக்கவில்லை. கர்த்தருக்குக் காணிக்கை கொடுத்துவிட்டால் வரிகட்டாமல் சம்பாதித்த கருப்புப் பணம் வெள்ளையாகிவிடாது. மத்தேயு 22:21ல் இயேசு, இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் கொடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். உனக்குத் தெரிந்தவர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி சுங்கவரி கட்டாமல் வெளிநாட்டிலிருந்து பொருட்களைக் கொண்டுவருவதும் குற்றமே.
ஜெபம்
ஆண்டவரே, எல்லா சூழ்நிலகளிலும் என் நாட்டின் சட்டதிட்டங்களை மீறாமல் வாழும் கிருபையை எனக்குத் தாரும். ஆமென்.