காலைத் தியானம் – ஜனவரி 29, 2021

1 தீமோ 6: 5                                                 

தேவபக்தியை ஆதாயத் தொழிலென்று எண்ணுகிற மனுஷரை விட்டு விலகு                       

ஏற்கனவே தியானித்த இந்த வேதாகமப் பகுதியிலிருந்து ஒரு வசனத்தை மாத்திரம் மறுபடியும் நாம் தியானிப்போம். நாம் எப்படிப்பட்ட ஊழியர்களைத் தாங்குகிறோம் என்பதைக் குறித்து கவனமாக இருக்கவேண்டும். ஊழியம் என்ற பெயரில் வியாபாரம் செய்யும் மனிதர்கள் இன்று பெருகிக் கொண்டே போகிறார்கள். பணம் சொத்து என்று சேர்த்துக் கொண்டே போகும் பிரசங்கிமாரைக் குறித்து ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும். பணத்தை எப்படி செலவழிக்கிறார்கள் என்பதை மூடி மறைக்கும் பிரசங்கியாருக்கு உன் காணிக்கையைக் கொடுக்காமலிருப்பது நல்லது. பரிசுத்த வேதாகமத்தின் போதனைகளுக்கு மாறான கருத்துக்களையும், அதற்கு முரணான வெளிப்பாடுகளையும் போதிப்பவர்களை ஆதரிக்கவேண்டாம். கர்த்தருடைய பெயரைச் சொல்லிக்கொண்டு தங்களுடைய சொந்த ராஜியங்களை விருத்தி செய்யும் பிரசங்கியாரை விட்டு விலகு.                 

ஜெபம்

ஆண்டவரே, உம்முடைய உண்மையான ஊழியக்காரரைக் கண்டுகொள்ளும் ஞானத்தை  எனக்குத் தாரும். ஆமென்.