காலைத் தியானம் – ஜனவரி 30, 2021

அப் 8: 14 – 24                                                 

உன் பணம் உன்னோடே கூட நாசமாய்ப் போகக் கடவது                       

பேதுரு விரட்டியடித்த மனிதனை இன்றைய போதகர்களில் அநேகர் அழைத்து, அரவணைத்துக் கொண்டிருப்பார்கள். கர்த்தருடைய ஆசீர்வாதத்தை உன் பணத்தின் மூலம் (காணிக்கையின் மூலம்) பெற்றுக்கொள்ள முயற்சிக்காதே. இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களை ஊழியத்திற்காக அனுப்பும்போது, இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள் என்று சொல்லிதான் அனுப்பினார். நீ கேட்க விரும்புவதைப் பேசவேண்டும் என்பதற்காகக் காணிக்கை கொடுத்து பிரசங்கிமாரைத் தூண்ட முயற்சிக்காதே.               

ஜெபம்

ஆண்டவரே, நான் காணிக்கை செலுத்தும் விஷயத்தில் அதிக ஜாக்க்கிரதையோடு செயல்பட எனக்கு உதவி செய்யும். ஆமென்.