காலைத் தியானம் – பிப்ரவரி 02, 2021

கலா 1: 13 – 17                                                   

எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே . . . போகாமலும்                       

இயேசு கிறிஸ்து பவுலுக்குத் தம்மை வெளிப்படுத்தினார். பவுல் தெரிந்துகொள்ளப்பட்டவர். நாமும் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் தானே! பவுல் புறஜாதிகளுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டும் என்பது தேவனுடைய சித்தம். அந்த சித்தம் பவுலுக்கு வெளிப்படுத்தப்பட்டவுடன், அவர் தேவ சித்தத்தின்படி செயல்பட்டார். இயேசுவோடு நெருங்கி வாழ்ந்திருந்த அப்போஸ்தலரிடத்திற்கு ஓடி, நான் என்ன செய்யவேண்டும் என்று ஜெபித்து சொல்லுங்கள் என்று கேட்கவில்லை. இயேசுவை நேரடியாகப் பிடித்துக் கொண்டார். இன்றும் நம்முடைய நேரடித் தொடர்புக்காக இயேசு ஏங்கிக் கொண்டிருக்கிறார். நாமோ மற்ற சீடர்களைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம்.            

ஜெபம்

ஆண்டவரே, நான் உம்மை நேரடியாகப் பற்றிக்கொள்ள தீர்மானித்துவிட்டேன். என்னோடு பேசும். ஆமென்.