காலைத் தியானம் – பிப்ரவரி 04, 2021

கலா 2: 1 – 10                                                           

நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாகும்பொருட்டு                      

முதல் முறையாக இயேசு கிறிஸ்துவை அறிந்து, இரட்சிக்கப்பட்டு, முழுக்கு ஞானஸ்நானம் எடுத்துள்ள ஒருவர், திடப்படுத்துதல் எடுக்கவேண்டுமா அல்லது தேவையில்லையா என்பது இன்று ஒரு திருச்சபையில் ஏற்பட்டுள்ள விவாதம். திருச்சபையின் சட்டங்கள் ஒருவரையும் இரட்சிக்க முடியாது. இவ்வாறாக, தேவையில்லாத இலட்சியங்களும் பழக்கவழக்கங்களும் நம்மிடையே பிரிவினையை உண்டாக்குகின்றனவா என்பதைக் குறித்து நாம் யோசிக்கவேண்டும். நாம் ஒரு குறிப்பிட்ட திருச்சபையின் அங்கத்தினர் என்றால், அங்கு சொல்லப்படும் அல்லது செய்யப்படும் எல்லாமே தேவ வாக்கு என்று கண்மூடித்தனமாக நம்பிவிடக் கூடாது. வேதாகமத்திலே நாம் வாசிப்பதுதான் தேவ வாக்கு!   பவுலின் நாட்களில் இருந்தது போல, இன்றும் நம் மத்தியில் “கள்ளச் சகோதரர்கள்” இருக்கிறார்கள். சட்டங்களையல்ல, கிறிஸ்துவையே நாம் பற்றிக் கொள்வோம். கிறிஸ்துவைப் பற்றிக் கொண்டால், நாம் சபையாக எடுக்கவேண்டிய முடிவுகளில் அவர் தெளிவைத் தருவார்.         

ஜெபம்

ஆண்டவரே, நான் உறுப்பினராக இருக்கும் இந்த திருச்சபையும் உம்முடையது. நாங்கள் உம்மையே நோக்கிப் பார்க்கிறோம். வழிநடத்தும். ஆமென்.