காலைத் தியானம் – பிப்ரவரி 05, 2021

கலா 2: 11 – 21                                                              

கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்                        

இயேசு கிறிஸ்துவுக்கும் பவுலுக்குமுள்ள நெருக்கம் நம்மைப் பிரமிக்க வைக்கிறது. பவுல் தன்னுடைய சுய சித்தம் கொல்லப்பட்டுவிட்டது என்று சொல்லுகிறார். கிறிஸ்துவே தனக்குள் வாழ்கிறார் என்பதைச் சொல்லால் மாத்திரமல்ல, செயலிலும் வாழ்ந்து காட்டினார். மூத்த அப்போஸ்தலனாகிய பேதுருவின் தவறை சுட்டிக் காட்டும் தைரியமும், மனப்பக்குவமும் பவுலுக்கு இருந்தது. நாமும் பவுலைப் போல, நம் ஆண்டவருடன் அந்நியோனியமாய் வாழ வேண்டும். எனக்குள் பிழைத்திருப்பதும் கிறிஸ்துவாயிருந்தால் என் கிரியைகளில் கிறிஸ்து வெளிப்படவேண்டுமே! (1 பேதுரு 4:2)        

ஜெபம்

ஆண்டவரே, நீர் பவுலைத் தெரிந்துகொண்டு ஆட்கொண்டதுபோல என்னையும் பிடித்துக் கொள்ளும்.  ஆமென்.