காலைத் தியானம் – பிப்ரவரி 06, 2021

கலா 3: 1 – 9                                                              

எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்?                         

கிரியைகளின் மூலம் கிருபையை சம்பாதிக்க முடியாது. இந்துமதம் உட்பட பல மதங்கள், இந்த வாழ்க்கையில் நாம் செய்யும் செயல்களே அடுத்த வாழ்க்கையில் நாம் பெறும் பெலன்களை நிர்ணயிக்கும் என்று சொல்லுகின்றன. அது சரியல்ல. கிறிஸ்துவின் வழியே மெய்யான வழி. அது கிருபையின் வழி. அந்த கிருபையின் வழியாகச் செல்லும்போது நாம் இவ்வாழ்க்கைக்குப் பின்னும் நித்திய, நித்திய காலமாய் பரலோகத்தில் வாழ்வோம். நம்முடைய சொந்த முயற்சியால் பரலோக வாழ்க்கையை அடைய முடியாது. அப்படிப்பட்ட கிருபையின் வழியைத் தெரிந்து கொண்டு, அந்த கிருபையின் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவர் கிருபையாய் கொடுக்கும் இரட்சிப்பை ஏற்றுக் கொள்வதுதான் நம்முடைய வேலை. இவ்வாழ்க்கையிலே பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெறுவதும் கிருபையினாலே மாத்திரம்தான்.  இது கிருபையின் காலம். கிருபையின் காலத்தை அசட்டைப் பண்ணாதே.        

ஜெபம்

பரம தகப்பனே, உம்முடைய குமாரனை ஈவாகக் கொடுத்து என்னை மீட்டுக் கொண்ட கிருபைக்காக நன்றி சுவாமி. என் விசுவாசத்தை உறுதிப்படுத்தும். ஆமென்.