காலைத் தியானம் – பிப்ரவரி 08, 2021

கலா 3: 19 – 29                                                                 

கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டீர்களே                            

அழுக்குப்படிந்த, கிழிந்த ஆடைகளை ஒருவன் அணிந்து கொண்டிருந்தால், அவனைப் பற்றி எப்படிப்பட்ட எண்ணங்கள் நம் மனதில் தோன்றும் என்பதைக் கற்பனைப் பண்ணிப் பாருங்கள். சுத்தமான, நேர்த்தியான உடைகளை அணிந்திருப்பவன் நம் உள்ளத்தில் எப்படிப்பட்ட எண்ணங்களை உண்டாக்குகிறான் என்பதையும் யோசித்துப் பாருங்கள். நாம் கிறிஸ்துவை அணிந்துகொண்டால், மற்றவர்கள் கிறிஸ்துவை நம்மில் காணவேண்டுமே! கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டவன் கிறிஸ்துவைப் போல பேச வேண்டும்; கிறிஸ்துவைப் போல போகுமிடமெல்லம் நன்மை செய்யவேண்டும். கிறிஸ்துவைப் போல பொறுமையாயிருக்கவேண்டும். கிறிஸ்துவைப் போல தாழ்மையுள்ளவனா(ளா)யிருக்க வேண்டும். கிறிஸ்து இப்பூமியில் வாழ்ந்து காட்டியபடி வாழவேண்டும். அனுதினமும் காலையில், கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டிருக்கிறாயா என்பதை நிச்சயம் செய்தபின்னரே, உன் வேலையை ஆரம்பி.                                                            

ஜெபம்

ஆண்டவரே, நீர் என்னுள் வாசம் செய்து என் கிரியைகளைக் காத்துக் கொள்ளும். அப்போது மற்றவர்கள் என் கிரியைகளில் உம்மைக் காண்பார்கள். ஆமென்.