காலைத் தியானம் – பிப்ரவரி 09, 2021

கலா 4: 1 – 11                                                                 

தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்                           

பெற்றோர்கள் இப்பூலோக வாழ்க்கையில் எவற்றை சேர்த்துவைக்கிறார்களோ அவற்றை அவர்களுடைய பிள்ளைகள் சுதந்தரித்துக் கொள்ளுகிறார்கள். கிறிஸ்துவின் இரட்சிப்பை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் தேவனுடைய பிள்ளையாகிவிடுகிறோம். அசுத்த ஆவிகள், நாம் இடம்கொடுத்தால் நம்மைத் தம் அடிமையாக்கி விடும். தேவனோ நம்மை அடிமைகளாக அல்ல, தம் பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ளுகிறார். நீ தேவனுடைய பிள்ளையென்றால், நீயும் தேவனுடைய சுதந்தரவாளி. அவருடைய சொத்துக்குப் பங்காளி. நித்திய வாழ்வு தேவனுடைய சொத்து. அதில் உனக்குப் பங்கு உண்டு. பரிசுத்தம் தேவனுடைய சொத்து. அதிலும் உனக்குப் பங்கு உண்டு. தேவனுடைய பிள்ளையாகக் கடைசிவரை நிலைத்திருக்கவேண்டும். அதற்கு நம்முடைய விருப்பமும் (willingness) தேவை; ஆண்டவருடைய கிருபையும் தேவை.                                                              

ஜெபம்

ஆண்டவரே, உலகத்தின் பிள்ளையாகி விடாமல், உம்முடைய பிள்ளையாகவே நிலைத்திருக்க எனக்கு அருள்புரியும். ஆமென்.