காலைத் தியானம் – பிப்ரவரி 11, 2021

கலா 4: 21 – 31                                                                         

சுயாதீனமுள்ளவர்களுக்கே பிள்ளைகளாயிருக்கிறோம்                           

சுயாதீனம் என்பது அடிமைத்தனத்திற்கு எதிர்மாறானது. அது சுய சிந்தனையையும் சுயமாய் தெரிந்துகொள்ளும் உரிமையையும் செயல்களையும் குறிக்கின்றது. அது விடுதலையைக் குறிக்கின்றது. சுதந்திரத்தைக் குறிக்கின்றது. நாம் சுதந்திரத்தின் பிள்ளைகள். நம்முடைய சுதந்திரம் கிறிஸ்துவின் அன்பினால் நிறைந்த சுதந்திரம். நாம் கட்டுண்டவர்கள் அல்ல. சுதந்திர மக்கள். அப்படியானால் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாமோ? செய்யலாம். கிறிஸ்துவின் அன்புதான் நமக்கு எல்லை. அதுதான் நம் பாதுகாப்புக்கு இருக்கும் வேலி. கிறிஸ்துவில் அன்பு கொண்டால் நம் செயல்கள் எல்லாம் நேர்த்தியாக இருக்கும். நீ கிறிஸ்துவினிடத்தில் அன்புகொண்டிருக்கிறாயா?                                             

ஜெபம்

ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன். என் செயல்களைக் காத்து வழிநடத்தும். ஆமென்.