காலைத் தியானம் – பிப்ரவரி 12, 2021

கலா 5: 1 – 12                                                                            

நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள்                           

நம்மிலும் விருத்தசேதனக் கிறிஸ்தவர்கள் உண்டு. விருத்தசேதனக் கிறிஸ்தவர்கள் என்றால் என்ன? ஆலயத்திற்குத் தவறாமல் போகிறேன். காணிக்கைக் கொடுக்கிறேன். ஆலயத்தின் ஒழுங்கு முறைகளைக் கடைப் பிடிக்கிறேன். ஆகையால் எனக்கு மோட்சம் உண்டு என்று தங்கள் சன்மார்க்க வாழ்க்கையை நம்பியிருக்கிறவர்கள் விருத்தசேதனக் கிறிஸ்தவர்கள். இந்த ஆசாரங்களில் தவறு எதுவும் இல்லை. ஆனால் அவைகள் நம்மைக் கிறிஸ்துவுக்கு நேராக, அவருக்கு சமீபமாகக் கொண்டு சென்றால் மாத்திரமே அவைகளால் பிரயோஜனமுண்டு. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, அவருடைய இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்று, அவருடைய உதவியுடன் நீதிமான்களாக வாழ்கிறவர்களுக்கு மாத்திரமே பரலோக வாழ்க்கை உண்டு.                                            

ஜெபம்

ஆண்டவரே, நான் என் செயல்களில் நம்பிக்கை வைக்காமல், உம்மில் நிலைத்திருக்க உதவிசெய்யும். ஆமென்.