காலைத் தியானம் – பிப்ரவரி 13, 2021

கலா 5: 13 – 26                                                                            

ஆவியின் கனி                                  

ஆவியின் கனி என்று ஒன்பது குணங்கள் அல்லது மனநிலைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவை அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் என்பவைகள். இவைகள் நம்மில் அநேகருக்கு மனப்பாடமாகத் தெரிந்தவைகள். எந்த நாட்டின் சட்டங்களோ அல்லது மதங்களின் சட்டங்களோ அல்லது ஆலய ஒழுங்குமுறைகளோ இவைகளைக் கட்டுப்படுத்தமுடியாது என்பதை நாம் உணருகிறோமா? ஆவியின் கனி என்பது, இங்கு ஒன்று அங்கு ஒன்று என்று தோன்றும் கனியல்ல. கொத்துக் கொத்தாய்க் காய்த்து பழுத்துக் குலுங்கும் விளைச்சலைப் போன்றது. The harvest of the Spirit (ஆவியின் அறுவடை) என்று ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பு கூறுகிறது. அறுவடை திரட்சியைக் குறிக்கும். நிறைவைக் குறிக்கும். பரிசுத்த ஆவியைப் பெற்றவனிடத்தில் நற்குணங்களின் திரட்சியைக் காணலாம். உன்னிடத்தில் நற்குணங்களின் திரட்சி காணப்படுகிறதா?                                                                                  

ஜெபம்

ஆண்டவரே, திராட்சச்செடியாகிய உம்மில் நிலைத்திருந்தால் நான் அதிகக் கனியைக் கொடுப்பேன். உம்மில் நிலைத்திருந்து பிறருக்கு உபயோகமான கனியைக் கொடுக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.