காலைத் தியானம் – பிப்ரவரி 14, 2021

கலா 6: 1 – 10                                                                            

ஏற்ற காலத்தில் அறுப்போம்                                        

தன்னுடைய நிருபத்தின் கடைசி அதிகாரத்திற்கு வந்தவுடன் பவுலின் மனதில் ஏகப்பட்ட எண்ணங்கள். ஆலோசனைகளைச் சொல்லிக்கொண்டே போகிறார். சாந்தமுள்ள ஆவியோடிருங்கள். சோதிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்துகொள்ளுங்கள். சுய கிரியைகளைச் சோதித்துப்பாருங்கள். ஊழியக்காரரைத் தாங்குங்கள். நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமலிருங்கள். . .  ஆம், நன்மை செய்வதில் சோர்வு ஏற்படக்கூடும். தீமை செய்கிறவர்கள் இந்த உலகில் செழிப்புடன் வாழ்வதைப் பார்க்கும்போது நன்மை செய்கிறவர்களுக்கு சோர்வு ஏற்படலாம். சோர்ந்து போக வேண்டாம். ஏற்ற காலத்தில் தக்க பலன்களை அறுப்போம் என்கிறார் பவுல்.  இயேசுவும் அதைத்தானே சொன்னார்! (மத்தேயு 10:42)                                                                                                               

ஜெபம்

ஆண்டவரே, சுய நலனையே எண்ணிக் கொண்டிருக்கும் என் மனதை மாற்றியருளும். ஏழைகளுக்கும், விதவைகளுக்கும், வியாதியாயிருப்பவர்களுக்கும், வயோதிபருக்கும் நன்மை செய்யும்படி என்னை வழி நடத்தும். ஆமென்.