காலைத் தியானம் – பிப்ரவரி 15, 2021

கலா 6: 11 – 18                                                                               

இயேசுவினுடைய அச்சடையாளங்களைத் தரித்துக் கொண்டிருக்கிறேன்.                                    

அந்த காலத்தில் அடிமைகளின் உடலில் எஜமானின் முத்திரைகளைப் பதிக்கும் பழக்கம் இருந்து வந்தது.  முத்திரையைப் பார்த்தவுடன் அடிமை யாருக்குச் சொந்தம் என்பதை எளிதில் சொல்லிவிடலாம். நம் நாட்டில்கூட மாடுகளின் மேல், சொந்தக்காரன் பெயரின் முதல் எழுத்தை சூடு போட்டு பதித்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். பல சொந்தக்காரர்களின் மாடுகள் ஒரே நிலப்பரப்பின் மேயும். சாய்ங்காலம் மாடுகளின் சொந்தக்காரர்கள் தங்கள் மாடுகளை எளிதாகப் பிரித்துக் கொண்டு போய்விடுவார்கள். பவுல் தன்னை இயேசுவின் அடிமை என்கிறார். அடிமைக்கு சுயமாய்ச் செயல்பட உரிமை கிடையாது. பவுலுக்கு இயேசு காட்டும் வழியில் செல்வதைத் தவிர வேறே வழி தெரியாது! பவுலைப் போல நீயும் இயேசுவுக்கு அடிமை தானே? அவருடைய அச்சு உன்மீதும் காணப்படுகிறதா?

(1 கொரி 6:20;  7:23)                                                                                                                 

ஜெபம்

என் எஜமானராகிய இயேசுவே, என்னைக் காணும் அனைவரும், என் வாழ்வில் உம்மைக் காணும்படி என் வாழ்க்கை பிரகாசிப்பதாக. ஆமென்.