காலைத் தியானம் – பிப்ரவரி 16, 2021

எபே 1: 1 – 12                                                                                

நம்மைத் தெரிந்துகொண்டபடியே                                             

இந்த நிருபத்தைப் பவுல் அப்போஸ்தலன் ரோமாபுரியில் சிறையில் இருந்துகொண்டு எபேசு பட்டணத்திலுள்ள கிறிஸ்தவர்களை ஊக்குவிப்பதற்காக எழுதினார். அவர், கிருபையினால் நாம் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறோம் என்கிறார். மேலும், எதற்காகத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறோம் என்பதைப் பவுல் இந்த வசனங்களிலே விவரிக்கிறார். பரிசுத்தமுள்ளவர்களாயிருப்பதற்கு, குற்றமில்லாதவர்களாயிருப்பதற்கு (without blemish) அவருடைய சுவிகார புத்திரராகும்படி, அவருடைய மகிமைக்கு புகழ்ச்சியாய் இருக்கும்படியாக நாம் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறோம். கிறிஸ்துவின் நாமம் மகிமைப்பட நீ செய்வது என்ன? (மத்தேயு 5:16).

ஜெபம்

ஆண்டவரே, நீர் என்னைத் தெரிந்து கொண்டீர். நான் எவ்விதத்தில் உம்மை மகிமைப்படுத்தவேண்டும் என்பதை எனக்குப் போதித்தருளும். ஆமென்.