காலைத் தியானம் – பிப்ரவரி 17, 2021

எபே 1: 13 – 23                                                                                    

சாம்பற் புதன்கிழமை பிரகாசமுள்ள மனக்கண்களை கொடுக்கவேண்டுமென்று   

எல்லாருக்கும் மனக்கண்கள் உண்டு. தேவன் நம் அனைவரையும் மனக்கண்களுடன் தான் உருவாக்கியிருக்கிறார். ஆனால் சிலருக்கு அக்கண்கள் மங்கலாயிருக்கின்றன. மனக்கண்கள் தெரியாமலுமிருக்கின்றன. எம்மாவு கிராமத்துக்குப் போன இரண்டு சீஷர்களின் மனக் கண்கள் குருடாயிருந்தன (லூக்கா 24: 16, 30, 31). இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தவுடன் அவர்களுடைய மனக்கண்கள் பிரகாசமுள்ளவைகளாக மாறிவிட்டன. ஆண்டவரையும் அவருடைய வல்லமையையும் அறிந்துகொள்ள பிரகாசமான மனக்கண்கள் தேவை. ஆண்டவரிடம் கேட்டு பெற்றுக் கொள்வோம். இரகசியப் பாவங்கள், பொருளாசை, அவிசுவாசம் போன்றவைகள் மனக் கண்களை மங்கலாக்கிவிடாதபடி அல்லது குருடாக்கிவிடாதபடி எச்சரிக்கையாயிருப்போம் (2 கொரி 4: 3,4).

ஜெபம்

ஆண்டவரே, எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களைத் தாரும். ஆமென்.