காலைத் தியானம் – பிப்ரவரி 18, 2021

எபே 2: 1 – 10                                                                                       

கிறிஸ்துவுடனே கூட உயிர்ப்பித்தார்   

இவ்வுலகில் மனிதனாகப் பிறந்த நாம் அனைவரும் பாவத்தின் பிடியில் சிக்கி, ஆத்தும மரணத்தைத் தழுவிக் கொள்ளுகிறோம். இயேசு கிறிஸ்துவுக்கு மாத்திரமே நம்மை அந்த மரணத்திலிருந்து உயிர்ப்பிக்கும் வல்லமை உண்டு.       உயிர்ப்பிக்கப்பட்டவனுக்கு நித்திய வாழ்வு நிச்சயம். அழிவு இல்லை. உயிர்ப்பிக்கப்பட்டவன் மேலான காரியங்களையே சிந்திப்பான். மேலான காரியங்களையே தேடுவான். அப்படி உயிர்ப்பிக்கப்பட்டவனைத் தான் இயேசு மறுபடியும் பிறந்தவன் என்று குறிப்பிடுகிறார். அப்படி உயிர்ப்பிக்கப்பட்டவனுக்கு உலகத்தின் மேல் பற்று இருக்காது. நீ உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறாயா? அல்லது அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவனா(ளா)கவே இருக்கிறாயா? உயிர்ப்பிக்கப்பட்டுவிட்டால், பாவங்கள் உன்னை நெருங்க முடியாது. உன்னதங்களிலே நீ இயேசு கிறிஸ்துவோடு உட்கார வேண்டியவன்(ள்). (கொலோ 3:1-4).

ஜெபம்

ஆண்டவரே, என்னை உயிர்ப்பித்து நீர் இருக்கும் இடத்துக்கு உயர்த்தியருளும். ஆமென்.