காலைத் தியானம் – பிப்ரவரி 19, 2021

எபே 2: 11 – 22                                                                                          

இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே      

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் யூதரையும் புற ஜாதியினரையும் ஒன்றாக்கிவிட்டது. அவர்கள் நடுவிலிருந்த சுவர் தகர்க்கப்பட்டு விட்டது. கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் மத்தியில் பிரிவினை இருக்க முடியாது. நாம் கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்களானால் ஜாதிப் பிளவுகள் நம் திருச்சபைகளில் இருக்கக் கூடாதே! உன் ஆலயத்தில் பிளவு உண்டா? உன் குடும்பத்தில் பிளவு உண்டா? நாம் அனைவரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தைப் பெற்றவர்கள் என்பதை உணருகிறாயா? (மத்தேயு 5: 23, 24)

ஜெபம்

ஆண்டவரே, என்னைக் கழுவி உயிர்ப்பித்தருளும். அப்பொழுது நான் பிளவுகளுக்குக் காரணமாயிருக்க மாட்டேன். ஆமென்.