காலைத் தியானம் – பிப்ரவரி 20, 2021

எபே 3: 1 – 11                                                                                          

இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது            

உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கிருபை எது? உன் குடும்பம் உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கிருபை. உன் நண்பர்கள் உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கிருபை. உன்னுடைய வேலை அல்லது தொழில்கூட உன் தேவன் உனக்குக் கொடுத்துள்ள கிருபைதான். நீ வேலை செய்யும்போது அந்த உணர்வு வெளிப்படுகிறதா? நீ வேலை செய்யும் இடத்தில், உன் மூலமாகக் கிறிஸ்துவின் பெயர் மகிமைப்படவேண்டும் என்பதற்காகத் தான் அந்த வேலை உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை உணருகிறாயா? உன் வேலையைக் கிறிஸ்துவோடு இணைத்துப் பார்த்ததுண்டா?  நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் கிருபை, கிருபை என்று ஏற்றுக் கொள்வதில் நம்மில் அநேகருக்குத் தயக்கம் எதுவுமில்லை. ஆனால் ஏன் அந்த கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது என்று யோசித்துப் பார்த்ததுண்டா?

ஜெபம்

ஆண்டவரே, நீர் எனக்குக் கிருபையாகக் கொடுத்துள்ள என் வேலைக்காக உம்மைத் துதிக்கிறேன். நான் வேலை செய்யுமிடத்தில் என்னை உமது கருவியாக உபயோகித்தருளும். ஆமென்.