எபே 3: 12 – 21
அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள
அறிவுக்கு எட்டாததை எப்படி அறிந்துகொள்ள முடியும்? ஆண்டவருடைய அன்பு உலகப்பிரகாரமான அறிவுக்கு அப்பாற்பட்டது. உலகப் பிரகாரமான அறிவைப் புத்தகங்களைப் படித்து பெற்றுக் கொள்ளலாம். கிறிஸ்துவின் அன்பை அனுபவத்தினால் மாத்திரமே அறிந்துகொள்ள முடியும். அறிவுக்கெட்டாத அந்த அன்பு கிறிஸ்துவோடு நாம் கொள்ளும் உறவின் மூலமாகத் தெரிந்துகொள்ளும் அன்பு. அளவற்ற அந்த அன்பு நல்லவர்களை மாத்திரம் நேசிக்கும் அன்பல்ல; நாம் பாவிகளாயிருக்கும்போதே நம் மீது பொழியப்பட்ட அன்பு. கிறிஸ்து நம் இருதயங்களில் வாசம் செய்தால் மாத்திரமே ருசிக்கக் கூடிய அன்பு அது. அந்த அன்பை உனக்குத் தெரியுமா? அப்படிப்பட்ட அன்பை உன் மீது பொழிகிறவர் விரும்பும் காரியங்களை நீ செய்கிறாயா?
ஜெபம்
ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன். நீர் விரும்பும் காரியங்களையே செய்ய விரும்புகிறேன். என் இருதயத்தில் தொடர்ந்து வாசம் செய்யும். ஆமென்.