எபே 4: 22 – 32
சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னால்
கோபம் ஒரு பொல்லாத குணம். ஆனால் அது ஒரு சாதாரண மனித சுபாவம் என்று நாம் நினைக்கும் அளவுக்கு எல்லாரிடமும் காணப்படுகிறது. கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் அது மூர்க்க வெறியாக மாறி கொலை வரை கொண்டுபோய்விடும். ஆகையால் தான் இயேசு கிறிஸ்து, ஒருவன் தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக் கொள்வது கொலை செய்வதற்கு சமமானது என்று சொல்லுகிறார் (மத்தேயு 5: 21, 22). நீ எந்த ஒரு காரியத்துக்காகவும் கோபப்பட்டு விட்டால், படுக்கைக்குப் போகும் முன் உன் கோபம் தணிந்துவிடவேண்டும். அதாவது உடனேயே உன் கோபத்தைத் தணித்து யாரிடம் கோபப்பட்டாயோ, அவர்களோடு ஒப்புரவாகிவிட வேண்டும். கணவன் மனைவி உறவில் இதைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவேண்டும். அப்போது உங்கள் குடும்பத்தில் சமாதானமும் மகிழ்ச்சியும் நிலவும்.
ஜெபம்
ஆண்டவரே, கோபப்படாத சாந்தகுனத்தை எனக்குத் தாரும். ஆமென்.