காலைத் தியானம் – பிப்ரவரி 25, 2021

எபே 5: 1 – 10                                                                                                      

ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்               

நாம் செய்யத் தகாதவைகள் என்று பவுல் அப்போஸ்தலன் கொடுக்கும் பட்டியல் நீளமானது. வேசித்தனம், மற்ற அசுத்தம், பொருளாசை, வம்பு, புத்தியீனமான பேச்சு, பரியாசம் ஆகியவைகள் தகாதவைகள் என்று அவர் சொல்லுகிறார். தகுந்த செயல் என்று கர்த்தரைத் துதிப்பதைச் சொல்லுகிறார். தகாத செயல்களைத் தவிர்க்கவேண்டுமானால், தகுந்த செயலைச் செய்யவேண்டும்! சும்மாயிருக்கக் கூடாது. கர்த்தரைத் துதித்துக் கொண்டேயிருந்தால், துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தேவன் உங்கள் அருகில் வந்துவிடுவார். அவரை அருகில் வைத்துக் கொண்டு தகாத காரியங்களைச் செய்ய முடியாது. நன்மையானதைக் கொண்டுதான் தீமையானதை விரட்டியடிக்க வேண்டும்.

ஜெபம்

ஆண்டவரே, என் மனது நன்மையானவைகள் மீதே வாஞ்சையாய் இருக்கட்டும். தீமையான எண்ணங்களுக்கு என்னை விலக்கிக் காரும். ஆமென்.