காலைத் தியானம் – பிப்ரவரி 26, 2021

எபே 5: 11 – 21                                                                                                        

இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி               

காலையிலும் கர்த்தரைத் துதித்துப் பாடவேண்டும். மாலையிலும் அவரைத் துதித்துப் பாடவேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் துதிப்பாடல்களைப் பாடிக் கொண்டேயிருக்க வேண்டும்.  அப்படிச் செய்தால் சாத்தான் நம் பக்கம் வரமாட்டான்.  சத்தமாகப் பாடமுடியாத சூழ்நிலைகளில் கூட உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடி கீர்த்தனம் பண்ணிக் கொண்டேயிருக்கலாம். அதே சமயம், சத்தமாகத் துதிப்பாடல்களைப் பாடும் சமயங்களில்கூட, நம் வார்த்தைகள் நம் இருதயத்திலிருந்து வரவேண்டும்.  உதடுகள் மாத்திரம் பாடினால் அது கர்த்தரைத் துதிக்கும் துதிப்பாடல் அல்ல. பாடல்களை மனப்பாடம் செய்து கொள்வது ஒரு நல்ல பழக்கம்.

ஜெபம்

ஆண்டவரே, நான் எப்பொழுதும் உம்மைத் துதித்துக் கொண்டேயிருக்க உதவி செய்யும். எப்பொழுதும் என் அருகிலேயே இரும். ஆமென்.