காலைத் தியானம் – பிப்ரவரி 27, 2021

எபே 5: 22- 33                                                                                                       

தம்மைத் தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்               

கிறிஸ்து தன் திருச்சபைக்காக, அதாவது நம் ஒவ்வொருவருக்காகவும் தம்மைத் தாமே சிலுவையில் மரிக்கும்படி ஒப்புக்கொடுத்தார். அவருடைய அன்பு, தியாகம் செய்யும் அன்பு. நிபந்தனையற்ற அன்பு. நீடிய பொறுமையுள்ள அன்பு. கிறிஸ்து சபையை நேசிக்கிறது போல, கணவன் தன் மனைவியை நேசிக்க வேண்டும் என்று பரிசுத்த வேதாகமத்தில் பார்க்கிறோம்.  கணவனுக்குக் கீழ்ப்படியவேண்டும் என்பதையும், மனைவியிடம் அன்புகூரவேண்டும் என்பதையும் பிரித்துப் பார்க்கமுடியாது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானதாக, தேவனை மகிமைப் படுத்துவதாக அமைய வேண்டுமானால் கணவன், மனைவி இரண்டுபேரும் இன்று வாசித்த வசனங்களில் சொல்லப்பட்டுள்ள கட்டளைகளைக் கைக்கொள்ள வேண்டும்.

ஜெபம்

ஆண்டவரே, என் குடும்ப வாழ்க்கை எப்போதும் உமது அன்பினால் பிணைக்கப்பட்டதாய் இருக்கட்டும். ஆமென்.