காலைத் தியானம் – பிப்ரவரி 28, 2021

எபே 6: 1 – 9                                                                                                       

மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல்                     

திருச்சபையில் கூட தேவனுக்கென்று ஊழியஞ்செய்யாமல், மனிதருக்கென்று ஊழியம் செய்யப்படுவதைப் பார்க்கிறோம் அல்லவா? மனிதனின் பணத்தையும் பதவியையும் பார்த்துதானே ஆலயத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன!  பணக்காரனைத் தானே பெரிய மனிதன், பெரிய இடத்துக் குடும்பம் என்று சொல்லுகிறோம். அதிக காணிக்கைக் கொடுக்கிறவன் சிறந்த கிறிஸ்தவன் என்று இயேசு ஒருபோதும் சொல்லவில்லையே! அவர் இரண்டு காசு காணிக்கைக் கொடுத்த ஏழையைத் தானே போற்றினார்! பின் ஏன் நாம் மனிதரைப் போற்றும், மனிதருக்கென்று ஊழியஞ்செய்யும் சபைகளாக மாறிவிட்டோம். மனிதருக்கென்று ஊழியஞ்செய்கிறவன், நிலையற்ற இவ்வுலகில், நிலையற்ற நன்மைகள் சிலவற்றைப் பெறக்கூடும். கர்த்தருக்கென்று ஊழியம் செய்கிறவனோ, நித்திய வாழ்வின் இன்பத்தைப் பெறுவான். நீ எதைத் தெரிந்து கொள்ளுகிறாய்?

ஜெபம்

ஆண்டவரே, நான் உமக்கென்றே ஊழியம் செய்ய விரும்புகிறேன்.  வழிநடத்தி காத்துக் கொள்ளும். ஆமென்.