காலைத் தியானம் – மார்ச் 04, 2021

பிலி 1: 12 – 20                                                                                                      

சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்று                             

சிறையில் அடைக்கப்பட்டு பல துன்பங்களை அனுபவித்த பவுல் சோர்ந்து போகவில்லை. மாறாக, அது தனக்குக் கிடைத்த தருணம் என்று கருதி ரோமப் போர் சேவகர்களுக்கும் மற்றவர்களுக்கும் திருவசனத்தைப் போதித்தார். அவரைப் பார்த்த அநேகர் ஊக்குவிக்கப்பட்டு தைரியமாக சுவிசேஷத்தை அறிவித்தார்கள். ஒருசிலர் பவுலின் மூலமாக பல அதிசயங்கள் நடை பெறுவதைப் பார்த்து, அவர்மீது பொறாமைக் கொண்டு, அவர்களும் சுவிசேஷத்தை அறிவிக்க ஆரம்பித்தார்கள்! பவுலுக்கோ அதைக் குறித்தும் மகிழ்ச்சிதான். ஒருவேளை நமக்கு சிறையில் அடைக்கப்படும் சூழ்நிலை வராமலிருக்கலாம். ஆனால் நாம் வேலை இழப்பு, பணக்கஷ்டம், குடும்பத்தில் குழப்பம், திருச்சபையிலும் சமுதாயத்திலும் ஒதுக்கப்படுதல் போன்ற துன்பம் தரும் சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடலாம். அப்படிப்பட்ட நேரங்களிலும் திருவசனத்தைப் போதிக்க நீ தயாரா?                    

ஜெபம்

ஆண்டவரே, என் சூழ்நிலைகள் என் விசுவாசத்தை அசைத்துவிடாதபடி நீர் என்னைத் தாங்கி வழிநடத்தும். ஆமென்.