காலைத் தியானம் – மார்ச் 05, 2021

பிலி 1: 21 – 30                                                                                                      

உங்கள் விசுவாசத்தின் வர்த்தனைக்காகவும் சந்தோஷத்துக்காகவும் நான் பிழைத்து                                

சாவு எனக்கு ஆதாயம், ஏனென்றால் என் உடலை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டேன் என்றால் நான் இயேசு கிறிஸ்துவை சந்தித்து அவருடனேயே இருப்பேன் என்கிறார் பவுல். அது மாத்திரமல்ல, இந்த உலகில் அவர் பிழைத்திருப்பது மற்றவர்களுக்காகவே என்கிறார். இன்று நமக்கு இரண்டு கேள்விகள். நாம் இங்குள்ள உலகப்பிரகாரமான காரியங்களில் மூழ்கிவிட்டோமா அல்லது கிறிஸ்துவின் மீதே நம் கண்கள் இருக்கின்றனவா? இரண்டாவது கேள்வி: நாம் இப்பூமியில் வாழும் நாட்களை யாருக்காக உபயோகிக்கிறோம்? சுயநலத்திற்காகவா அல்லது பிறருடைய மகிழ்ச்சிக்காகவா?                                    

ஜெபம்

ஆண்டவரே, இந்நாள் வரை நீரே என்னைப் பாதுகாத்து வருகிறீர். இப்பூமியில் மீதியிருக்கும் என் நாட்கள் அனைத்திலும் நான் பிறருக்கு உபயோகமாயிருக்கும்படி என்னை உபயோகியும். ஆமென்.