பிலி 2: 1 – 11
கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தை
உன் குடும்பத்தில் நிம்மதி இல்லையென்றால் கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தை உங்கள் ஒவ்வொருவரிடமும் இல்லை என்று அர்த்தம். சபையில் உள்ள குழப்பங்களுக்கும் அதுதான் காரணம். இயேசு கிறிஸ்து இவ்வுலகம் உண்டாவதற்கு முன்னதாகவே இருந்தவர், இப்பொழுதும் இருக்கிறவர்; உலகம் முழுவதையும் உண்டாக்கிய அவர் சர்வ வல்லமையுள்ளவர். அப்படிப்பட்ட ஆண்டவர், ஒன்றுமில்லாத மனித உருவம் எடுக்கும்படி தம்மைத் தாமே தாழ்த்தினார். சாத்தானோ தன்னை உயர்த்தி ஆண்டவராக விரும்பினான். மனிதரையும் அப்படியே செய்யும்படி தூண்டுகிறான். இயேசுவின் சிந்தை அல்லது attitude எப்படி இருந்தது? பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதில் அவர் ஒரு மனதாய் இருந்தார். அவர் பூமியில் வாழ்ந்த நாட்களில் பிறரைப் பற்றியே நினைத்து பிறருக்காகவே வாழ்ந்தார். அவர் பிறரை சேவிப்பதிலேயே முழுமனதாய் இருந்தார். அவர் மனிதனாய் வாழ்ந்த நாட்களில் தமக்காக ஒன்றும் செய்யவில்லை. மேலும் அவர் தம்மையே பலியாக, sacrifice ஆகக் கொடுத்தார். உன் வாழ்க்கை எப்படி இருக்கிறது? நீ யாருக்காக வாழ்கிறாய்? யாரை அல்லது எதைச் சேவிக்கிறாய்? எதையாவது sacrifice பண்ணுகிறாயா?
ஜெபம்
ஆண்டவரே, நீர் வாழ்ந்து காட்டிய தாழ்மைக்கு நேராக என்னையும் வழி நடத்தும். ஆமென்.