காலைத் தியானம் – மார்ச் 07, 2021

பிலி 2: 12 – 18                                                                                                     

தேவனே விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்                                      

சில மதங்களில் மனிதன் என்ன செய்தாலும், அவனுக்கு என்ன நேரிட்டாலும் – சரியோ, தவறோ, நல்லதோ அல்லது கெட்டதோ – அதுதான் விதி என்கிறார்கள். கிறிஸ்துவை அறிந்தவர்களில் சிலர் கூட நாம் எடுக்கும் சரியான முடிவுகள், தவறான முடிவுகள், நம்முடைய நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் “ஆண்டவருடைய சித்தம்” என்று சொல்லிவிடுகிறோம். அதைத்தான் இந்த வசனமும் உறுதிப்படுத்துகிறதோ? இல்லவே இல்லை. நேற்று வாசித்த பகுதியில் கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தை நம்மிடமும் இருக்கவேண்டும் என்பதைப் பார்த்தோம். இயேசு நமக்கு ஒரு வாழ்க்கை முறையை முன்மாதிரியாக வைத்துள்ளார். He has set a pattern for us to follow. அவர் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட திட்டத்தையும் வைத்திருக்கிறார். ஆகையால் நாம் பிற பிரபல கிறிஸ்தவ ஊழியரின்  வாழ்க்கையையோ அல்லது ஊழியத்தையோ முழுவதுமாகப் பின்பற்ற முயற்சிக்கக் கூடாது. அவர்கள் வாழ்க்கையில் வெளிப்படும் கிறிஸ்துவின் சிந்தையை மாத்திரம் பின்பற்றவேண்டும். கிறிஸ்து நம் முன் வைத்திருக்கும் வாழ்க்கை முறை அல்லது pattern நம்முடைய சொந்த முயற்சியினால் மாத்திரம் அடையக்கூடியது அல்ல. அதற்கு திரியேக தேவனின் பெலன் வேண்டும். அப்படி கர்த்தர் காட்டும் வழிகளில், அவருடைய திட்டத்தின்படி செயல்படும்போது, அவர் சரியான விருப்பத்தையும், செய்கையையும் நம்மில் உண்டாக்குகிறார்.                               

ஜெபம்

ஆண்டவரே,  நான் சுயமாய் எதையும் சாதிக்க முடியாது. நீர் எனக்குக் காட்டும் பாதையில், நீர் எனக்கு முன் வைத்திருக்கும் வாழ்க்கைமுறை படி வாழ உதவி செய்யும். ஆமென்.