காலைத் தியானம் – மார்ச் 08, 2021

பிலி 2: 19 – 30                                                                                                     

இப்படிப்பட்டவர்களை கனமாய் எண்ணுங்கள்                                      

பவுலுக்கு ஊழியத்திலே உதவி செய்த தீமோத்தேயுவைப் பற்றியும் எப்பாப்பிரோதீத்துவைப் பற்றியும் பவுல் புகழ்ந்து பேசிவிட்டு, அப்படிப்பட்டவர்களை சபையார் கனம் பண்ணவேண்டும் என்கிறார். இன்று நாம் பணக்காரரையும், அரசியல் செல்வாக்கு உடையவர்களையும், உயர்ந்த பதவியில் இருப்பவர்களையும் தானே கனம்பண்ணுகிறோம்? உண்மையும் உத்தமுமாய் ஊழியம் செய்கிறவர்களைக் கனம்பண்ணுகிறோமா? மேலும் பவுல் தீமோத்தேயுவைப் போல வேறொருவனும் தன்னிடத்தில் இல்லை என்கிறார் (வசனம் 20). அன்று போல இன்றும் தீமோத்தேயுவைப் போன்று அநேகர் இல்லை. ஊழியத் தலைவர் பற்றாக்குறையை நம்மால் பார்க்கமுடிகிறதல்லவா? There is a dearth of Christian leaders who follow the pattern set by Christ.  பவுல் தீமோத்தேயுவுக்கு கர்த்தருடைய வழிகளைப் போதித்தார். வாழ்ந்து காட்டினார். மேலும் தீமோத்தேயு பவுலுக்கு உதவி செய்து, பிறருக்கு சேவை செய்து ஆசீர்வாதமாக வாழும் பயிற்சியையும் அனுபவத்தையும் பெற்றான். போதனை, பயிற்சி, அனுபவம். இயேசு தம்முடைய சீஷர்களைக் கட்டியெழுப்ப உபயோகித்த முறையும் இதுதான். இன்று  தீமோத்தேயுக்களை உருவாக்குவதில் உன் பங்கு என்ன?                              

ஜெபம்

ஆண்டவரே, தீமோத்தேயுக்களைக் கட்டி எழுப்ப எனக்கு உதவி செய்யும்.  ஆமென்.