பிலி 3: 17 – 21
நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது
அந்நாட்களில், பிலிப்பி பட்டணம் ரோமாபுரியின் அரசாட்சிக்குள்ளிருந்த ஒரு ரோமர்களின் குடியிருப்பாக இருந்தது. அதை ரோமாபுரிக்கு வெளியே இருந்த ரோமாபுரி என்று சொல்லுவார்கள். A Rome away from Rome. பவுலோ, பிலிப்பி பட்டணத்து விசுவாசிகளைப் பார்த்து, நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது என்று சொல்லுகிறார். நாம் பரலோகத்தின் குடிமக்கள் என்றால் பூமியில் இருப்பது அர்த்தமற்ற வாழ்க்கையா? இல்லை. நமக்கு இங்கும் பொறுப்புகள் உண்டு. கர்த்தர் இப்பூமியில் கொடுத்திருக்கும் ஆசீர்வாதங்களை அனுபவிக்கும் உரிமையும் உண்டு. ஆனால் ஏற்கனவே நாம் தியானித்தபடி பூமியின் காரியங்கள் நம்மை அடிமைப்படுத்திவிடக்கூடாது. நாம் பூமியின் காரியங்களைப் பரலோகக் கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும். நம்முடைய இருதயம் பரலோகக் காரியங்களில் வேறூன்றி இருக்க வேண்டும். இப்போது நீ வசிக்கும் ஊர் நீ settle ஆகிவிட்ட இடம் அல்ல. அது நீ தற்காலிகமாக வாழும் இடம். பரலோகம்தான் நாம் அனைவரும் settle ஆக வேண்டிய இடம். மிஞ்சிப் போனால் 70, 80 அல்லது 90 ஆண்டுகள் இங்கே. நித்திய காலம் அங்கே!
ஜெபம்
ஆண்டவரே, நான் எல்லாவற்றையும் பரலோகத்தின் கண்ணோட்டத்தில் பார்க்க உதவி செய்யும். ஆமென்.