பிலி 4: 1 – 7
தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்
நாம் ஆண்டவரிடத்தில் நம்முடைய பிரச்சனைகள் அல்லது துன்பங்கள் எவ்வளவு பெரியவை என்று எடுத்துக் கூறி மன்றாடுகிறோம். ஆனால் பிரச்சனைகளைப் பார்த்தவுடன் எவ்வளவு பெரிய தேவன் நம்மோடிருக்கிறார் என்று நினைப்பதில்லை. “Do not tell God how great your problems are. Tell your problems how great your God is” என்று ஒரு பக்தன் சொல்லுகிறார். ஆண்டவருடைய வல்லமைக்கு முன் என் துன்பங்கள் எம்மாத்திரம்? எல்லாவற்றையும் தேவனுக்குத் தெரியப்படுத்திவிட்டு தோத்திரப்பாடல்கள் பாடுங்கள். அவர் பார்த்துக் கொள்வார். அவர் எல்லாவற்றையும் அதினதின் நேரத்தில் நேர்த்தியாகச் செய்து முடிப்பார்.
ஜெபம்
ஆண்டவரே, என் மனப்பாரத்தையெல்லாம் உம் பாதத்தண்டை இறக்கி வைத்துவிடும்படி என் விசுவாசத்தை உறுதிப்படுத்தும்.