காலைத் தியானம் – மார்ச் 13, 2021

பிலி 4: 8 – 14                                                                                                 

என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்து                                

எந்த குறையும் இல்லாத அசாதாரண மனிதராகக் கிறிஸ்து நம்மை பெலப்படுத்திவிடுவார் என்பது இந்த வசனத்தின் பொருள் அல்ல. கிறிஸ்துவின் பயிற்சிக்கூடம் நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. சில சமயங்களில் அவர் துன்பங்களின் மூலமாக நம்மைப் பெலப்படுத்துகிறார்.  சில நேரம் சோதனைகளின் மூலமாக நம்மைப் பெலப்படுத்துகிறார். மற்ற சமயங்களில் நண்பர்கள் மூலமாக, குடும்ப சூழ்நிலைகள் மூலமாக, மற்ற விசுவாசிகள் மூலமாக நம்மைப் பெலப்படுத்துகிறார். இப்படி நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். கர்த்தர் எல்லா சூழ்நிலைகளிலும் நமக்குத் தேவையான பெலனைத் தருகிறார். நாம் அதிலே திருப்தியாக இருக்கவேண்டும் என்பதே இந்த வசனத்தின் அர்த்தம்.  தான் கேட்டதைக் கொடுக்காமல், என் கிருபை உனக்குப் போதும் என்று கர்த்தர் சொன்னதை அறிந்த பவுல்தான் என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலன் உண்டு என்று சொல்லுகிறார். கிறிஸ்து உனக்கும் தேவையான பெலனைக் கொடுப்பார்.                                                        

ஜெபம்

ஆண்டவரே, நான் சோர்வடையும் நேரங்களிலே நீரே என்னைப் பெலப்படுத்தும். ஆமென்.